பாகிஸ்தானில் கொடூரமாக எரித்து படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார தியவதனவின் சடலத்தை இன்று (06) கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 186 விசேட விமானம் மூலம் சடலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்த விமானம் இன்று மாலை 5 மணிக்கு நாட்டை வந்தடையும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து கம்பஹா – கணேமுல்ல பிரதேசத்திலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிச் சடங்குகள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.