தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி,எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் 22 நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரி சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போதுமான அளவு மசகு எண்ணெய் இல்லாமை காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
சுமார் 50 நாட்களுக்கு சுத்திகரிப்புப் பணிகளை இடைநிறுத்த வேண்டும் என எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், 22 நாட்களின் பின்னர் இன்று முதல் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.