கொழும்பில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (07) கொழும்பு தலவத்துகொட வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிள் எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எவ்வாறாயினும், சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.