களனி கங்கையில் கழிவுப் பொருட்கள் வீசப்படும் 1,500 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறான இடங்களை கடற்படையின் உதவியுடன், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கண்காணிக்கவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆறுகளை பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் களனி கங்கையின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்க சுற்றாடல் அமைச்சு உத்தேசித்துள்ளது.