நாடு முழுவதும் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
மேலும் பால்மா தட்டுப்பாடு குறித்து நாட்டின் பல பகுதிகளில், கடை உரிமையாளர்கள் தமது நுகர்வோருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான கடைகளில் 1 கிலோ பால் மா பாக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதாகவும் நுகர்வோர் ஆசியன் மிரருக்கு தெரிவித்தனர்.
சில கடைகளில் ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் பால் மா மட்டுமே வழங்குவதாகவும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
இதேவேளை, கடைகளில் இன்னும் பால் மா கிடைக்கவில்லை எனவும் சில பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் பால் மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தமையால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அந்தக் காலத்தில் பால் மா பாக்கெட்டை வாங்க நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.