இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது பொருத்தமானது என தானும் நம்புவதாக இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"இந்த நேரத்தில் நாம் ஒரு மாற்றாக IMF உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மற்ற நாடுகள் எங்களுக்கு ஆதரவளிப்பது குறைவாகவே தெரிகிறது, எனவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி முன்னேற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், அரசாங்கத்தின் சில பங்குதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.