லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கப்பலில் இருந்த எரிவாயு தரமற்றது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவில் விசேஷ துர்நாற்றம் வீசுவதற்காக சேர்க்கப்படும் எத்தில் மெர்காப்டானில் ரசாயனம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட ஆய்வின் போதே இந்த நிலை தெரியவந்துள்ளது.
இதில் 29% புரொப்பேன் மற்றும் 69% பியூட்டேன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பல எரிவாயு கலன்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தரமற்றவை என கண்டறியப்பட்டால் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.