கூப்பன் முறையில் எரிபொருளை வழங்கும் யோசனை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதியின் விலை உயர்வை கருத்திற் கொண்டு இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதே பொருத்தமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இலங்கையில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளமையும் இந்த பிரேரணைக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அமைச்சரவை அந்த யோசனைக்கு உடன்படவில்லை.
எரிபொருள் இறக்குமதிக்கு ஒரு மாதத்திற்கு $300 மில்லியன் முதல் $420 மில்லியன் வரை செலவாவதாகவும் கொரோனா காலத்தின் பின்னர் நாட்டில் எரிபொருள் பாவனையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.