மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து இளைஞனும் யுவதியும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸார் காணாமல் போன யுவதியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பெண் ரித்மாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். சிறப்பு வகுப்பில் கலந்து கொள்வதற்காக யுவதி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியதாக போலீஸ் விசாரணை அறிக்கை கூறுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.