நான்கு நாட்களாக லிட்ரோ நிறுவனம் எந்த எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு வழங்கவில்லை. இதனால் பண்டிகைக் காலங்களில் உணவகங்களின் செயற்பாடுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, கொழும்புக்கு கப்பலில் கொண்டு வரப்பட்ட 3200 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை நுகர்வோர் அதிகார சபை நிராகரித்துள்ளது.
இந்நிலையில் மாலைதீவில் இருந்து கொழும்பு வந்த மற்றுமொரு கப்பலில் இருந்த 2000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கப்பலில் உள்ள சமையல் எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்கான மாதிரிகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.