கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி, மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்பதற்கு காணப்படும் மேலதிக 10 மாதங்களை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
இந்த வருடத்திற்கான சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகள் திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.