web log free
March 18, 2026

'விரிவான விசாரணை வேண்டும்'

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமது கட்சி அடுத்துவரும் இரண்டு வருடங்களில் சர்வதேசத் தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd