மங்கள சமரவீரவின் விலைச் சூத்திரத்தின் பெறுமதி தற்போது புரிந்துள்ளதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என அமைச்சர் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகத்துறை மற்றும் தகவல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியமைக்காக சமரவீர SLPP யின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் சமரவீரவின் விலைச்சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் ரத்து செய்தது