நுவரெலியா நகரத்திலும் நகரின் எல்லைக்குட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியான பனிப்பொழிவு.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கமாகும்.
நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் உள்ள காய்கறி தோட்டங்கள் மற்றும் பண்ணைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் பனித்துளிகள் காணப்படுகின்றன.
நுவரெலியா பிரதேசத்தில் பனிப்பொழிவைத் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது.
காலநிலையினால் தமது மரக்கறி மற்றும் தேயிலை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என நுவரெலியா பிரதேச மக்கள் கவலையடைந்துள்ளனர்.
லிட்டில் லண்டன் என்று அழைக்கப்படும் நுவரெலியா ஒரு ஐரோப்பிய நாடு போல் காட்சியளிக்கிறது என சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
நமது சமூகத்திற்கும் மக்களுக்கும் மிகவும் பொருத்தமானது சுற்றுலா அல்லது விவசாயம், சிந்தித்து விரைவான முடிவுகளை எடுங்கள்.