புதிய அச்சுறுத்தல் டெல்மிக்ரான் - Delmicron
ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டில் இருந்து தற்போது டெல்மிக்ரோன் எனும் புதிய மாறுபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வாக டெல்மிக்ரோன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏனைய மாறுபாடுகளின் கொரோனா அறிகுறிகளுக்கும், டெல்மிக்ரோன் பிறழ்வின் கொரோனா அறிகுறிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், டெல்டா மாறுபாட்டை போல ஒமிக்ரோன் அல்லது டெல்மிக்ரோன் மாறுபாடுகள் இந்தியாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதாக அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.