கொள்கலன்கள் மீளப் பெற படுமா?
முழுமையாக பயன்படுத்தப்படாத எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
சட்டமா அதிபரின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தப்படும்
முழுமையாக பயன்படுத்தப்படாத எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான திட்டமொன்றை வகுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் முழுமையாக பயன்படுத்தப்படாத எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் எரிவாயு அடுப்பு வெடிப்புகள்
இந்த நிலையில், நாட்டின் சில பிரதேசங்களில் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளான சம்பவங்கள் நேற்றும் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஹட்டனில் உள்ள உணவகமொன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளானதில் தீக்காயங்களுடன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கொகவந்தலாவை எல்டொப் தோட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.