web log free
April 06, 2026

'நிதி ஒதுக்காவிட்டாலும் வேலை செய்வோம்'

அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்படாவிட்டாலும், உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்திற்கும் நிதி ஒதுக்கிடப்படமாட்டாது என தேர்தல்
காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாவிட்டாலும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் தகைமை தமது அணிக்கு உள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd