நேற்று (25) காலை பிலியந்தலை - மொரட்டுவ வீதியில் கொஸ்பலேன பாலத்தில் இருந்து பொல்கொட ஆற்றில் தவறி விழுந்து ஒருவர் காணாமல் போனதை அடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போனவர் கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான வசந்த டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றும் காணாமல் போன நபர் பாலத்தின் அருகாமையில் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். "