web log free
January 13, 2025

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்: ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?

Lolவவுனியாவில் தனிநபர் போராட்டம்

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கூண்டு சந்தியில் நின்று குறித்த நபர் நேற்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

 

Last modified on Thursday, 30 December 2021 05:57
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd