தற்போதைய அமைச்சரவையின் தோல்வியினால் முழு நாடும் தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அமைச்சரவை பெரும் தோல்வியடைந்துள்ளது.
ஒரு நாட்டின் அமைச்சரவை இவ்வாறு தோல்வியடையும் போது அது முழு நாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.
இந்த கேபினட் அமைச்சர்களுக்கு எந்த பாட அறிவும் இல்லை, பாடங்கள் குறித்த எந்த உணர்வும் கூட இல்லை என்றும் அவர் கூறினார்.
விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் அரசாங்கம் புதிய பயணத்தை மேற்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.