web log free
June 28, 2026

கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டை இறைச்சியின் விலை தற்போது குறைந்துள்ளது.

கடந்த பண்டிகை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 26 ரூபாவாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.      

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd