எரிவாயு நெருக்கடிக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யாமையின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“அரசாங்கம் பல தவறுகள் செய்திருக்கிறது.ஒன்று உரப்பிரச்சினை.நல்ல காரியம் செய்யப் போய் இப்போது வேறு பக்கம் திரும்பிவிட்டது.அடுத்த வருடத்தில் இருந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பாவைத்தான் சாப்பிட வேண்டும்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அரிசியுடன் ஒப்பிடும் போது பொன்னி சம்பாவில் அதிக இரசாயன கூறுகள் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இரசாயன உரங்களின் பாவனையால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக கூறும் வைத்தியர்கள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பாவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.