அலிகார் மகா வித்தியாலயத்துக்கும் 'பிரபஞ்சம்' திட்டத்தின் மூலம் அபிவிருத்தி!
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறமையான இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை வழங்கும் முன்னோடித் திட்டமான 'பிரபஞ்சம்'மூன்றாம் கட்டம் நேற்று (04) ஆரம்பமானது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,
தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' முன்னோடித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (750,000) மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை திருகோணமலை கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (04) வழங்கி வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவாக அமைந்து செயற்படும் 'பிரபஞ்சம்' நிகழ்ச்சித் திட்டம் நாட்டின் பின்தங்கிய பாடசாலைக் கல்வி முறையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் நவீன தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.