மின்சார அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவை தயார் செய்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மின்சாரத் தடைகளை குறைக்க முடியும் என சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஐந்து நாட்களுக்கும் மேலாக இடைக்கிடையே மின்சாரம் தடைப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் மாலை 6.30 – 10.30 மணி வரையான காலப்பகுதியினுள் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
மேலும் எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.