கித்சிறி கஹடபிட்டிய கொவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில் உயிருக்கும் மரணத்துக்கும் இடையே போராடிய அவர் கோமா நிலைக்குச் சென்று நேற்று (ஜனவரி 09) இரவு உயிரிழந்தார்.
கொவிட்-19 நோய்க்காக கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 9 மணியளவில் காலமானார்.
இறக்கும் போது 60 வயதுக்கு மேற்பட்ட கித்சிறி கஹடபிட்டிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் புளத்சிங்களவில் அமைப்பாளராக இருந்தார்.