இதன்போது பாரதிபுரம் கிராமத்தினை சேர்ந்த சபிசன் (22வயது) என்ற இளைஞன் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உறவுமுறையான 47 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருவதுடன் இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு வெடித்த இடியன் துப்பாக்கி மற்றும் தடையங்கள் என்பன விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றார்கள்.