- “நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்ல ஒன்றிணையுங்கள்...”
- “குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டுவதை நிறுத்துங்கள்…”
- "சவால்களுக்கு மத்தியிலும் அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டவில்லை…"
- "பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமையளித்தோம்…"
- "பாதாள உலகக் கோஷ்டி மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை முற்றாக இல்லாதொழிப்போம்…"
- "அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…"
- "அரசியல் நோக்கங்களுக்காக வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த வேண்டாம்…"
- "உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க பாராளுமன்றத்தில் விவாதங்களை நடத்துங்கள்…"
- "வரலாற்றில் எதிர்கொண்ட அனைத்துச் சவால்களும் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன..."