இன்று (19) இரவு 10 மணிக்குள் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையக்கூடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான எரிபொருள் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையுமாயின் தேசிய மின் கட்டமைப்பில் 150 மொகாவோல்ட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படும்.
அவ்வாறாயின் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிக காலம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, நெருக்கடிகளுக்கு மத்தியில் மின் துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று (19) விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.
மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு இடையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.