நேற்றைய தினம் (ஜனவரி 18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஒரு நீண்ட உரையில் தனது அரசாங்கத்தின் அடுத்த மூன்று வருடங்களுக்கான கொள்கைப் பார்வையை கோடிட்டுக் காட்டினார்.
தேசிய இனப் பிரச்சினையை பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்கும் தனது கொள்கையில் மாற்றம் இல்லை என்பதை தெளிவாக கோடிட்டுக் காட்டினார்.
என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.
ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது என்கிறார் எம்.பி மனோ