web log free
February 07, 2026

'நீர் விநியோக தடைக்கு மின்சார துண்டிப்பே காரணம்'

வறட்சி காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை தடை செய்ய எவ்விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிக்கப்பட்டுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகி ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நீர் விநியோகம் தடைப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

நீரை பாய்ச்சும் பிரதேசங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என தாம் மின்சார சபையிடம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் லகி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd