web log free
May 23, 2026

வௌிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 11 இளைஞர்கள் கைது

வௌிநாட்டுக்கு சட்டவிரோதமான செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த வேன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd