இலங்கையில் மூன்றாவது முறையாக லொக்டவுன் செய்வதற்கு எவ்வித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படாதென சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடு மீண்டும் முடங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு தடுப்பூசிகளை மிகவும் வெற்றிகரமாக செலுத்திய உலகின் முதல் 5 நாடுகளுக்கு இலங்கை உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நிலைமையை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது மக்களின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் உலகின் பணக்கார நாடுகளில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலைமையில் இருந்து தப்பி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.