ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர மற்றும் திலும் அமுனுகம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரளவின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட, சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்யன் ராசமாணிக்கம் ஆகியோர்க்கு கடந்த வாரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது