தேவையற்ற நேரத்தில் புதிய புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ததன் மூலம் பல பில்லியன் ரூபா பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர் ஏ.எஸ்.விதானகே இதனைத் தெரிவித்தார்.