web log free
May 23, 2026

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியலை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் நீடித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று (02) விசாரணைக்கு வந்த போது, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து, சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்த நீதிமன்றம், அன்றைய தினம் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd