டோகா - கட்டாரில் இலங்கை பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக டோகா செய்திகள் தெரிவிக்கின்றன.
டோகாவில் குடியிருப்பு காவலர் பணியில் ஈடுபட்டு வந்த இலங்கையரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இலங்கையர் குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்படவில்லை.
குடியிருப்புக்கு பெண் ஒருவருடன் வாகனத்தில் வந்த ஆணிடம் அடையாள அட்டையை குறித்த காவலர் கேட்டபோது அதனை வழங்க மறுத்த ஆண் அத்துமீறி உள்ளே செல்ல முயற்சித்துள்ளதார்.
இதனை காவலர் மறித்த போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கை நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டோகா செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட இலங்கை நபர் குறித்த தகவல்களை ஏசியன் மிரர் தமிழ் இணையத்தில் எதிர்பாருங்கள்...