சம்புர் அனல்மினல் நிலையம் இன்று காணப்பட்டிருந்தால் 5 நிமிடங்கள் கூட மின்வெட்டை அமுல்படுத்த தேவை ஏற்பட்டிருக்காது என,ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், சம்பூர் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிட்டு நாட்டை மின்சார பற்றாக்குறைக்கு தள்ளிவிட்ட முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்சார பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் திறமையுள்ளவர்களுக்கு இடமளிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.