இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த, நாலக பண்டார கொட்டகொட ஆகியோருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.