web log free
January 15, 2025

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கையில் கைது

தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மாதகல் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து, மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களையும் இரண்டு படகையும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

கடந்த 27ம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில், படகு நடுக்கடலில் மூழ்கி படகில் இருந்த இலங்கை மீனவர் மாயமானதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று மாலை சடலமாக பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கினார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் படகுகளை சிறைபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தொடர்ந்து நேற்று காலை முதல் சாலைகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்..

May be an image of 4 people, people standing and outdoors

May be an image of 9 people, people standing, outdoors and text that says "OMMY திய இழுவைப் பட குக்கு எதிரான போராட்டம் எமது கடல் எல் லைக்குள அத்துமீறினம் கடல் வளத் தை யும், மீனவர்களின் தையும் அழித்தொழிக்கும் இந்தியன் அழித் இழுவைப் படகுகளின் படகு அத்துமிறலை த்துமறலைநிறுத்தும நிறுத் வரைக்கும் போராட்டம் தொடரும் .......... கடலலை காவு வாங்கப்பட்ட உறவுகளே எடங்களுக்கு போய் வாருங்கள் எங்களின் போராட்டம் தொடரும்" டற்தொழிலாளர் கூட்டுறவுச் சIம"

May be an image of 10 people, people standing, outdoors and text that says "இலங்கை அரே இந்திய கைது தசய வக திலங்கை இந்திய இழுவைப் படகுக்கு எதிரான போராட்டம் அரசே எமது கடல் எல்லைக்குள் அத்துமிறி எம் கடல் வளத் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித தொழிக்கு இழுவைப் படகுக ளின் இந்தியன் மீறலை நிறுத் தும் வரைக்கும் எமது போராட்டம் தொடரும் .......... கடலலை தாலாட்ட இந்தியகயவர்களால் காவு வாங்கப்பட்ட நீதி க்கும் வரை போய் வாருங்கள் உறவுகளே தொடரும்" கடற்தொழிலாளர்கட்டறவுச்சங்கம்."

Last modified on Wednesday, 02 February 2022 04:08
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd