web log free
May 10, 2025

மாணவனின் சடலம் மீட்பு

நாவலபிட்டி, கல்லோயா பகுதியில் 13 வயதுடைய மாணவன், சடலமான மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (02) பிற்பகல் 2.30 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவன், நாவலபிட்டி பகுதியில் உள்ள பாடசாலையில்கல்வி கற்று வந்துள்ளதாகவும் சிறுவனின் தாய் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுவன்பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்துவந்துள்ளதுடன் நேற்று முன்தினம் பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா பயணத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரனைக்காக, நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் தலைமையில் இடம்பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம், நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd