web log free
April 06, 2026

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை வீச்சு

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பத்தரமுல்லையில் நாடாளுன்றம் நோக்கிச் செல்லும் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர்.

இதன்காரணமாக, அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd