web log free
May 10, 2025

ஓமந்தை வரை புதிய ரயில் பாதை

மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் நீளத்துடனான ரயில் பாதையை இந்திய நிதியுதவி ஒத்துழைப்புடன் புனரமைப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வடமாகாணத்திற்கு செயல்திறன் பாதுகாப்பு மற்றும் சிறந்த பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துகளை மேற்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்துடன் ரயிலை செலுத்துவதற்கும், ஆகக் கூடுதலான எடைகளை தாங்கக் கூடிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி இந்த பாதையை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய 91.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு M/s Ircon International Ltd. நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd