web log free
May 23, 2026

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை

எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி முதல்18ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்த விசேட சேவைக்காக 1487 மேலதிக பஸ்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கால அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்‌ஷ கூறியுள்ளார்.

கொழும்பு, ஹட்டன், கண்டி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதியிலும் குறித்த காலத்தில் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd