web log free
January 14, 2025

ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கினாலும் மாதம் இருமுறை புத்தளம் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) (PTA) இன் கீழ் சுமார் 22 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (7) பிணை வழங்கியுள்ளது. விடுதலைக்காக புத்தளம் மேல் நீதிமன்றில் (HC) மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவல ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு (புத்தளம் உயர்நீதிமன்றம்) உத்தரவிட்டனர்.

ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபருக்கு ஆட்சேபனை இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த மாதம் இராஜதந்திரிகளிடம் தெரிவித்திருந்த போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிணை வழங்குவதற்குத் தேவையான அதிகார வரம்பு தமக்கு இல்லை என புத்தளம் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

நேற்று இந்த உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் சட்டங்களின் கடுமையான கூறுகளைத் திருத்துவது சட்டமன்றம்/நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டது.

அந்த கூறுகளை நீதியின் நலன்களுக்காக விளக்குவது நீதித்துறையின் பொறுப்பாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd