குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலபிட்டிய, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் கணவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று மீனவராக தொழில் செய்து வருகிறார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கணவர் அவரை அடித்து, அவரது சீருடையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.