web log free
October 01, 2023

சோதனைச் சாவடியில் அதிகாரி தற்கொலை

அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசுட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை 08.35 மணியளவில் தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

வரகாபொல, கந்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தில்ருக்‌ஷ சமரசிங்க என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விசேட அதிரடிப் படை வீரரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.