ராஜபக்ச குடும்பத்தில் மகிந்த ராஜபக்ச மட்டுமே நன்றியுடையவர் எனவும் குடும்பத்தின் சிறப்பை அறிந்தவர் எனவும் பசில் ராஜபக்சவின் தகுதி தெரிந்ததால் அவர் பற்றி பேசக்கூட விரும்பவில்லை எனவும் நாரஹேன்பிட்டி அபயராம பீடாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முன்வந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மீது அவதூறு பரப்புவது நன்றிகெட்ட செயல் என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சமன் ரத்னபிரிய அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ரத்னபிரிய ஒரு பாம்பு எனவும் அவர் கூறுகிறார்.
இணையத்தளமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.