web log free
October 01, 2023

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் சிங்கள – மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான முதலாவது தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5ஆம் திகதியான இன்றுடன் முதலாம் தவணை நிறைவுக்கு வரவுள்ளதுடன், இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி நிறைவடையுள்ளன.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.