பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால் பிரதமருக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என அவர் கூறினார்.
இதற்கிடையில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிகா விக்கிரமசிங்கவுக்கும் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் எம்.பி. மூன்று தடுப்பூசிகளையும் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றார்.