நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை 200, 300 ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது.
எனவே கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.